Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. முன்கோபத்தை தவிர்த்திடுங்கள்.. எடுக்கும் காரியங்கள் வெற்றியாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று முன்கோபத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். திடீர் பயணம் என்றால் வழக்கமான பணிகளில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். இன்று  மனக்குழப்பமும் கொஞ்சம் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் எடுக்கும் முயற்சிக்கு பின் நடைபெறும்.

தொழில் வியாபாரம் ஏற்றம் இறக்கம் ஆகவே இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பது எதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகவே பணி ஆற்ற வேண்டி இருக்கும். இன்று  எதைச் செய்வதாக இருந்தாலும் இறை வழிபாட்டுடன் செய்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் படித்த பாடத்தை கண்டிப்பாக எழுதிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எளிதாக வெற்றியும் பெற முடியும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |