விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கடந்தகால உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். பிறரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை கூடும். நிம்மதியான தூக்கம் உருவாகும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். லக்ஷ்மி தேவியை வழிபட்டு இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களை தொடங்குங்கள். நீங்கள் படிக்கும் பாடங்கள் மனதில் நிற்பதற்கு இது உதவி செய்யும். அதுமட்டுமில்லாமல் படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும்.
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின் முடிவுகள் எடுப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகள் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. யாரிடமும் தயவுசெய்து கோபம் காட்டாதீர்கள், வாக்குவாதம் செய்யாதீர்கள், கொஞ்சம் நீங்கள் எந்த விஷயங்களிலும் பின்வாங்கிச் செல்வது நல்லது.இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்.
இறை வழிபாடு உங்களுக்கு மனதை மகிழ்விக்க கூடிய அளவில் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்