Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள்..அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாதீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப சூழ்நிலையை பிறரிடம் தயவு செய்து பேச வேண்டாம். உங்களுடைய ரகசியங்களை முற்றிலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த நிலையில் இயங்கும் சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும் போக்குவரத்தில் கவனத்தை பின்பற்றுவது நல்லது. தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவது கருத்து சொல்வதும் ஏதும் வேண்டாம்.

இன்று அந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வார்கள். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும். கூடுமானவரை கொஞ்சம் அன்பாகவும் வாக்குவாதங்கள் இல்லாமலும் இருப்பது இன்று நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். ஆன்மிக சிந்தனையுடன் இன்று காரியங்களை மேற்கொள்ளுங்கள்.

அனைத்து விஷயமும் உங்களுக்கு சாதகமாகவே முடியும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும். நல்லபடியாகவே இருக்கும் கவலை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ் புத்தாண்டு என்பதால் இன்று விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் ஒரு பாகமாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |