Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..வளர்ச்சியில் இருந்த இடையூறுகள் விலகும்..சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் தரம் உயரும். நண்பர்களால் உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும். அரசியல்வாதிகளின் உதவியும் இன்று பரிபூரணமாக கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் செய்ய வேண்டி இருக்கும். சகோதரர் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே உங்கள் கையில் இருக்கும்.

ஆர்டர்களை கூட முடித்துக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் தடங்கல்கள் இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், இது மட்டும் நீங்கள் கவனமாக மேற்கொள்ளுங்கள். இன்று  மாணவர்களுக்கு எதிரும் புதிருமாக இருந்த அவர்கள் விலகிச் செல்வார்கள், கல்வியில் முட்டுக்கட்டையாக இருந்தவர்களும் விலகிச்செல்வார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும். அது மட்டுமில்லை தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |