விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய கருத்துக்கு மாற்று கருத்துகள் எழலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருங்கள் அது போதும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். குழப்பங்கள் அகன்று குதூகலம் பிறக்கும். திட்டமிட்டட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கும் மேலோங்கும் கட்டிட பணி மீண்டும் தொடரும். மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். நீங்கள் மனதை தளரவிடாமல் இன்று எதையும் செய்யுங்கள் அனைத்து விஷயங்களும் நன்மையில் முடியும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது கோபம் கொள்ள வேண்டாம்.
பொறுமையாக இருங்கள் உங்களுக்கான நேரம் வரும்வரை நாம் காத்திருப்போம். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளிப்போடுங்கள். காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும். புதியதாக காதலில் வயப்படக் கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.