விருச்சிக ராசி அன்பர்கள்…!! இன்று உங்களுடைய செயல்களில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபார வளர்ச்சி பெறும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் கடந்து செல்லும். வியாபாரம் தொடர்பான பிரச்சனை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அதுகுறித்து கவலை வேண்டாம். வாடிக்கையாளரிடம் அன்பாகப் பேசுவது நல்லது.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்புடன் இருப்பது நல்லது. கூடுமானவரை இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். அதே போன்று உங்களின் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். முடிந்தால் இறைவழிபாட்டுடன் காரியத்தை தொடங்குங்கள் அனைத்தும் நல்லபடியாக அமையும். இன்று காதலர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அறிந்துகொள்ளுங்கள் கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது காரியங்கள் நல்லபடியாக முடித்துக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்