Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசி… கௌரவம் அந்தஸ்து உயரும்…எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…

விருச்சிக ராசி அன்பர்களே… இன்று எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் திறம்பட செய்வதற்கு கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும்.பெண்ணின் சினேகம் உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். வீடு வாங்கக் கூடிய எண்ணம் மேலோங்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். கௌரவம் அந்தஸ்து உயரும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை மட்டும் தவிர்த்துவிடுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இன்று காணப்படும். மன தைரியம் உண்டாகும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களது நல்ல செயல்களின் மூலம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் குறைவின்றி இருக்கும்.

தேவையற்ற இடமாற்றம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக செய்யுங்கள் பொறுமையாக இருங்கள் எப்பொழுதும் பொறுமையை கையாண்டால் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது.

சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுத்தால் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்ட திசை:தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்

 

Categories

Tech |