விருச்சிக ராசி அன்பர்களே… இன்று நிம்மதியற்ற தன்மையால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.சிலருக்கு பண இழப்புகள் கூட ஏற்படலாம். கோபத்தால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு சந்தோசம் குறையும்.எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.ஆனால் சிறு தடைகளுக்கு பின்னர்தான் சில முயற்சிகள் வெற்றியடையும்.
எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள்.இல்லத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும்.கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள்.கூடுமானவரை அன்பாக நடந்து கொள்ளுங்கள் பிள்ளைகளிடம் கோபப்பட நேரிடும் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும்.அதேபோல குடும்பத்தாரிடம் மிக கவனமாக பேசுவது நல்லது.அவர்களின் கோபத்திற்கு தயவுசெய்து ஆளாக வேண்டாம்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்