Categories
மாநில செய்திகள்

விருதுநகரை விட்டு வெளியே செல்லலாம்…. ஆனால் ஒரு கண்டீஷன்….. ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு..!!

பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின்  நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து  ஜாமீன் கோரிய அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, சாட்சிகளை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில் தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின்தொடர்வதாக கூறி வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

மேலும் ராஜேந்திர பாலாஜியுடைய ஜாமின் நிபந்தனைகளும் தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக முழுவதும் பயணம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஆனது அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், ராஜேந்திர பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது காவல்துறையிடம் உரிய முறையில் தகவல் தெரிவித்துவிட்டு விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

 

Categories

Tech |