விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக 200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட கட்டுப்பாட்டு அறை தனியாக திறக்கப்பட்டு சுகாதாரத் துறை மூலமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தாலும், தொற்று அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை முதல் 273 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஏற்கனவே 2749 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 273 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3 ஆயிரத்து 22 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.