Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் விவசாயிகளுக்கு 25% மானிய உதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தீவனம் பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில் தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்,டிராக்டர் ஆகியவற்ற 25% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த உபகரணங்களில் மொத்த விலை 42 லட்சம். இதில் பயனாளியின் பங்குத்தொகை 31.5 லட்சம் போக 10.5 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகின்றது. இந்த திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள்,பால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியவை விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் தொடர்பாக தகுதியான நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை உதவி மருத்துவரின் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |