Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் விவசாயிகளே…. இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று  காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ளார். நடப்பு ஆண்டிற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியராக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மூலம் தெரிவித்து பயன்பெற முடியும். மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்..

Categories

Tech |