அமமுக கூட்டணியில் விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பலர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கட்சி அமமுக கூட்டணியில் இணைந்தது.
இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்ட நிலையில் வேட்பாளர்பட்டியல் வெளியாகியது. அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடவுள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. 2006, 2011, 2016 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.