Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி ஐடி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலில் கிடா விருந்து வைத்துள்ளார். இதில் திவாகரின் நண்பர்களான ஐ.டி நிறுவன ஊழியர் விஷ்ணு(25), ஆதர்ஷ்(25), நவீன் குமார், அஜித், சங்கர் 5 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆதர்ஷ் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஷ்ணு தனது நண்பரை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரையும் தண்ணீர் அடித்து சென்றது. இது குறித்து தெரிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு வாலிபர்களையும் இரவு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதனால் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது முள் செடியில் சிக்கி மிதந்து கொண்டிருந்த விஷ்ணுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் ஆற்றின் கரையோரம் மிகுந்த ஆதர்ஷின் உடலும் மீட்கப்பட்டது. பின்னர் இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |