தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இதனையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்யும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2000 முதல் ரூ.5000 அல்லது அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பவர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
அதில் விருப்ப மனு தாக்கல் செய்யும் தொண்டர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மேலிடப் பொறுப்பாளர்களிடம் மனுவை அளிக்க வேண்டும் எனவும், அதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தந்த மாவட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டுள்ளதற்கான பட்டியலையும் அவர் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் திமுக , விசிக கூட்டணி எப்போதும் தொடரும் என தெரிவித்துள்ளார்.