டிடிவி தினகரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வெற்றி தோல்வி இரண்டையும் சரியான மனநிலையோடு அணுக வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எங்களுக்கு நல்லதொரு அடித்தளமாக அமைந்துள்ளது.
யாரும் கட்சியை விட்டு சென்று விட்டார்கள் என்பதற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. ஒரு மரத்தில் ஒரு சில இலைகள் உதிர்வதால் மரம் வேரோடு சாய்ந்து விடும் என்று அர்த்தம் கிடையாது. யாரையும் நம்பி நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அதிமுகவுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்பத்தான் நான் செயல்படுவேன். அமமுகவை நான் விருப்பப்பட்டு ஆரம்பிக்கவில்லை வேறு வழியில்லாமல் தான் கட்சியை ஆரம்பித்தேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.