Categories
மாநில செய்திகள்

விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு…. தேர்தலில் பணியாற்ற அழைப்பு….!!

விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தேர்தலில் பணியாற்றலாம்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கான தனி பணியாளர்கள் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தேர்தலில் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து பணியில் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 4ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை தேர்தலில் பணியாற்ற வேண்டும். நான்கு நாள் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தேர்தல் ஆணையர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும்.

Categories

Tech |