கொம்பன் படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி “விருமன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து உள்ளார். இவற்றில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அண்மையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி இருக்கிறது. இவற்றில் தனக்கு முதல் எதிரியான தன் அப்பா பிரகாஷ் ராஜை அடித்தவனுக்கு மேல தாளத்தோட வந்து பிரகாஷ்ராஜ் முன்பே மோதிரம் போடுவது போல் இந்த ஸ்னீக் பீக் வெளியாகியது. இத்திரைப்படம் இன்று ( ஆகஸ்ட்.12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.