தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய திரைப்படம் விருமன். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க நடிகர் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படம் மூலமாக இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
கிராமத்து கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அப்பா மகன் சண்டை, அண்ணன் தம்பி பாசம் என “விருமன்” படத்தை தனது வழக்கமான பாணியில் இயக்கி இருக்கிறார் முத்தையா. நக்கல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் கார்த்தி ஸ்கோர் செய்ய, அவருக்கு சற்றும் குறையாமல் நடிப்பில் அசத்தி இருக்கிறார் (முதல் படம் என தெரியாத அளவுக்கு) அதிதி ஷங்கர். 1st half விறுவிறுப்பு என்றாலும், 2st half சற்று தொய்வு. இருப்பினும் ஒருமுறை பார்க்கலாம். தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் விருமன் வசூலை குவிக்கும்.