விருமன் படத்தில் லோக்கலான கேரக்டரில் நடித்துள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விருமன் படத்தை முத்தையா இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான கொம்பன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விருமன் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இதன் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#Viruman தர லோக்கல் ❤️🔥🔥@Karthi_Offl na Today Fans Meet pic.twitter.com/zSzMse1qzi
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) November 19, 2021
சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் படப்பிடிப்பின் இடையே கார்த்தி தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது விருமன் படத்தில் தனது கேரக்டர் லோக்கலாக இருக்கும் என தெரிவித்துள்ளார் .