குழந்தை வயிற்றில் இருந்த போது அந்தத் தாய் பக்கோடாவை அதிக விரும்பி சாப்பிட்டதால் தங்கள் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்? எந்த மாதிரி வளர்க்க வேண்டும், எந்த ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தற்போது யோசித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
இங்கிலாந்தில் கேப்டன் டேபிள் அயர்லாந்தில் உள்ள நியூ டவுன் பேயில் இருக்கும் பிரபலமான உணவகம் இந்த உணவகம். இது சமூக ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளது. தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் தங்கள் உணவகத்தில் உள்ள ஒரு உணவின் பெயரை குழந்தைக்கு வைத்துள்ளனர் என்று பகிர்ந்துள்ளனர். இது என்ன பெயராக இருக்கும் என்று பலரும் யோசித்து வந்த நிலையில் அது இந்திய உணவின் பெயர் பக்கோடா என்பதே. உணவகம் புதிதாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து பக்குவராவை உலகிற்கு வரவேற்கிறோம். உன்னை சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு பகோரா உடன் சில உணவுகளின் பெயர்களை கொண்ட அந்த உணவகத்தின் பில் ரசீதின் புகைப்படத்தையும் உணவகம் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த நைட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வருகின்றனர். சிலர் கிண்டல் அடித்து வருகின்றனர்.