சுவிஸ் நாட்டில் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல பொய்களை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சீக்கிரமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மக்கள் பல பொய்களை கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஒவ்வொரு மண்டலத்திலும் உரிய ஆவணங்களை கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறிய நிலையில் பலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதாக போட்டுக் கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏப்ரல் முதல்வாரத்தில் துர்காவ் மண்டலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாம் அதிக நோய்வாய் பட்டதாகக் கூறி தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாஸல் மண்டலத்தில் 50 நபர்களை போலியான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.