Categories
மாநில செய்திகள்

விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்…. ஆய்வு செய்து தலைமைச் செயலாளர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மழை நீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார். இதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் ராஜமன்னார் சாலையில் 4.57 கிலோமீட்டர் நீளத்திற்கும், ரயில்வே பார்டர் சாலையில் 3.3 கிலோமீட்டர் நீளத்திற்கும், பசுல்லா சாலையில் 5.28 கிலோமீட்டர் நீளத்திற்கும், ராதா கிருஷ்ணன் சாலையில் 1.4 கிலோமீட்டர் நீலத்திற்கும் நடைபெறும் மின் மோட்டார்கள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அடையாறு முதல் அண்ணா பிரதான சாலை வரையில் வெள்ள நீர்  தடுப்பு நிதியின் கீழ் புதிய மழைநீர் வடிகால் பணிகளும், கொளத்தூர் ஏரியில் இருந்து உபரி நீர் தணிகாசலம் கால்வாயில் சென்று சேரும் வரையிலும்,  இந்நிலையில் நீர்வளத் துறையின் சார்பில்   கால்வாயில் கழிவுகளை அகற்றும் பணிகளும், கொளத்தூர் ஏரியில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளும் நடைபெறுகிறது.மேலும் ஆற்றின் கரைகளை  சீர் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது. மேலும்  பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பணிகள் அனைத்தையும் காலதாமதமதமின்றி  விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

Categories

Tech |