நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இவ்வாறு கொரோனா பரவல் காலத்தில் திரைப்படங்கள் ஓடிடியின் மூலம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிறிய பட்ஜெட் படங்கள் பயனடையும் வகையில் கேரள அரசு ஓட்டி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தும் என்று திரைபடத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். இதற்காக 150 கோடியில் திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்தராஞ்சலி ஸ்டுடியோ தயார் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.