ஒரு காலக்கட்டத்தில் நோக்கியா இல்லாத கைகளே இல்லை என்று சொல்லலாம். மொபைல் போன்களில் நோக்கியா மிகப் பெரிய புரட்சி செய்தது என்றே கூறலாம். எனினும் காலப் போக்கில் ஆண்ட்ராய்டு போன் வருகையால் நோக்கியா பின்தங்கியது. இருப்பினும் தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியாவும் களமிறங்கி வருகிறது. அந்த அடிப்படையில் அந்நிறுவனம் சார்பாக G60 5Gஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர்மாதம் சர்வதேச அளவில் அறிமுகமான இந்த மொபைலின் முக்கியமான ஸ்பெஷாலிட்டி மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாயிலாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த 5G ஸ்மார்ட் போன் விரைவில் ப்ரீஆர்டருக்கு கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Nokia mobile india தன் அதிகாரபூர்வமான டுவிட்டர் பேஜில் வெளியிட்டுள்ள இது தொடர்பான பதிவில் “120Hz ரெப்ரஷ் ரேட், 50MP டிரிபிள் AI கேமரா, ஹை-ஸ்பீட் 5G கனெக்டிவிட்டி தவிர்த்து பல வருடங்களுக்கான சாப்ட்வேர் & ஹார்ட்வேர் சப்போர்ட் போன்றவற்றுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக தயாராக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளது. மொபைலை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக அந்த நிறுவனம் மொபைலின் வசதிகளை வெளிப்படுத்தும் விதமாக அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் பட்டியலிட்டு உள்ளது.
எனினும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டுதேதி மற்றும் இந்திய விலை விபரங்களை பிராண்ட் இன்னும் வெளியிடவில்லை. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு 2 கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பிளாக் மற்றும் ஐஸ் என 2 கலர்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. நோக்கியா G60 5G மொபைல் 1080×2400 பிக்சல் ரெசல்யூஷன் உடைய 6.58இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மொபைலின் டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஷ் ரேட்டை கொண்டு உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லாகிளாஸ் 5 ப்ரொட்டக்ஷனை கொண்டிருக்கிறது.
டூயல் நானோசிம் ஸ்லாட்டை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு 12ல் இயங்குகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 6GB ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 695 5G SoC ப்ராசஸர் வாயிலாக இயக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலையானது ரூபாய்.20,000-க்குள் இருக்கும் என்று தெரிகிறது.