இந்திய நாட்டில் பாரம்பரியம் மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் அடிப்படையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுஷ் பொருள்களின் தரம் மற்றும் நம்பகத் தன்மைக்கு உத்தரவாதம் வழங்கும் விதமாக அவற்றின் மீது ஆயுஷ்குறியீடு பதிவிடும் நடைமுறையானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமா்நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஆயுஷ் (ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சை) மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வர விரும்பும் வெளிநாட்டினருக்கு “ஆயுஷ் விசா” (ஆயுஷ் நுழைவு அனுமதி) என்ற புதிய விசா நடைமுறையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமா் தெரிவித்தார்.