Categories
Tech டெக்னாலஜி

விரைவில் கம்மியான விலையில் ஜியோ போன் 5G?…. அசத்தலான அம்சங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ தன் முதல் 5G ஸ்மார்ட் போனை 2022ம் வருடத்தில் அறிமுகப்படுத்துவதாக சென்ற வருடம் அறிவித்தது. இது ஜியோ போன் 5G என கூறப்படும். இந்த போன் ஜூலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனமானது தெரிவித்திருந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் நிறுவனத்தால் போனை வெளியிட முடியவில்லை. இப்போது கீக் பெஞ்ச் பட்டியலில் இந்த போன் காணப்பட்டதால் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த போன் இந்திய தர நிலைகள் பணியக (BIS) பட்டியலில் காணப்பட்டு உள்ளது.

அதாவது,  சர்டிபிகேஷன் இணையதளத்தில், மாடல் எண் LS1654QB5 உடன் இந்த போன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. லிஸ்டிங்கில் போன் குறித்த எந்த தகவலும் இதுவரையிலும் வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த போன் தொடர்பான பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது. ஜியோ போன் 5G ஸ்மார்ட் போன் 6.5 இன்ச் HD + LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அத்துடன் இது 90HZ இன் புதுப்பிப்பு வீதத்தைப் பெறும்.

இது தவிர்த்து போன் ஆண்ட்ராய்டு 12 தொடர்புடைய அமைப்பாக இருக்கலாம். மேலும் பிரகதிஓஎஸ் என்ற பதிப்பைக் கொண்டிருக்கலாம் என விபரங்கள் கசிந்துள்ளது. இருப்பினும் இதுபற்றி உறுதியாக கூறமுடியாது.  பலவித தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சாதனங்களை மிக மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |