Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’…. எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘குட்லக் சகி’ படம் திரையரங்குகளில் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் ‘குட்லக் சகி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டது. பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு வழங்கும் இத்திரைப்படத்தை  வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.

காதல், நகைச்சுவை மற்றும் விளையாட்டு பின்னணியில் உருவாகிய இத்திரைப்படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிஷெட்டி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருந்த இப்படம் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இப்படம் திரை அரங்குகளில் ஜனவரி 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ள படக்குழு, பிரத்யேக போஸ்டரையும் வெளியிட்டது.

Categories

Tech |