கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் திரு. JP நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சமூகதல செயற்பாட்டாளர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் திரு. JP நட்டா மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். கொரோனா தொற்று காரணமாக தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறிய அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அரசு விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 76 லட்சம் விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை என்றும் திரு. நட்டா தெரிவித்தார்.