இந்தியா முழுவதுமாக விரைவில் நியாய விலைக் கடைகள் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட நாடு முழுவதுமாக நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட சமையல் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் நாட்டில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் சென்று பொருட்களை வாங்க முடியும்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வெளிச்சந்தையில் கிடைக்க செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் நியாயவிலைக் கடைகள் மட்டுமல்லாமல் வெளி சந்தைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்க செய்வதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அரிசி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.