Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவிடம் இருந்து விடுதலை… அதிபர் ஜோ பைடன்…!!!

கொரோனாவில் இருந்தே விரைவில் விடுதலை பெறுவோம் என அமெரிக்க அதிபருடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் அமெரிக்காவையும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்திக்க நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்கா பிடிக்கின்றது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் தற்போது தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. அமெரிக்கா இதுவரை ஆறு லட்சத்திற்கு மேல் உயிர்களை பலி கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவில் தற்போது முழுவேகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று சென்ற மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினமான நேற்று கொரோனாவிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

Categories

Tech |