Categories
மாநில செய்திகள்

விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி… தமிழக சுகாதாரத்துறை…!!!

கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா விற்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில் அந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ” ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, முதல் கட்டப் பரிசோதனையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 300 பேர் இடர் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேரும். மேலும் இந்த தடுப்பூசி 14 நாட்களில் மனித உடலில் வெள்ளை அணுக்களை உருவாக்குவதால், அந்த வெள்ளை அணுக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தையும் விரைவில் அழித்து விடும். அதன் பிறகு 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |