Categories
மாநில செய்திகள்

விரைவில்.. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் தொடக்கம்… எப்போது தெரியுமா…?

நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூர் இடையே வருகிற பத்தாம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் நான்காவது வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதனை அடுத்து நாட்டின் ஐந்தாவது வந்தே வாரத்தில் சென்னை மைசூர் இடையே வருகிற நவம்பர் 10ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதையும் பிரதமர் நரேந்திர மோடி தான் தொடங்கி வைக்க இருக்கின்றார் சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூர் வழியாக மைசூர் சென்றடைகின்றது. இதன் மூலமாக சென்னையில் முதன்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |