கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, மாமனிதன், தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதற்கிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் வெளிவராமல் இருந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது திரைக்கு வர இருப்பதாக சீனு ராமசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வையம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். அதில் பறவைகள் எச்சம் தான் காடு எங்கள் பண்பாட்டில் காடு தான் வீடு என தெரிவித்துள்ளார் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.