Categories
தேசிய செய்திகள்

விரைவில் நிபா வைரஸ்க்கு தடுப்பூசி… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் தற்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2018-ம் ஆண்டும் முதல் முதலில் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஜென்னர் இன்ஸ்டியூட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் இணைந்து நிபா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸின் மரபணு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இது, குரங்குகளிடம் நடத்திய சோதனையில், வெற்றிகரமாக செயல்பட்டு தொற்றை தடுத்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட சோதனை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |