நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக பல்வேறு முக்கியமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதனால் தேர்வுககளை மீண்டும் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கொரோனா காரணமாக இரண்டு கட்ட ஜேஇஇ தேர்வுகளும், நீட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், தேதி முடிவு செய்யப்பட்டதும் நீட் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.