Categories
தேசிய செய்திகள்

விரைவில் பறக்கும் பேருந்துகள்…. 100 கி.மீ வேகத்தில் பறக்கலாம்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய அவர், டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. அதனால் விரைவில் இந்தியாவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

இது மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். இந்த பேருந்துகளில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளது. அரசியல் இந்த திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் பறக்கும் பேருந்துகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |