Categories
மாநில செய்திகள்

விரைவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

மகளிர் சுய உதவி குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாளில் தள்ளுபடி செய்யும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து லட்சத்திற்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகை கடன்கள் தள்ளுபடி செய்யும் என்று அறிவித்திருந்தது. மேலும் மகளிர் சுய உதவி குழு கடனையும் தள்ளுபடி செய்யும் என அறிவித்தது. அதன்படி அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு விழா மேடையில் பேசினார். அப்போது மகளிர் சுய உதவி குழு கடன்களை அரசே ஏற்று செய்ய இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் கல்வி கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார். இந்த  செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |