Categories
Tech டெக்னாலஜி

விரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்….. Samsung வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது.

போன் இரட்டை சிம், டூயல்-பேண்ட் வைபை மற்றும் புளூடூத் போன்றவற்றை ஆதரிக்கும். Galaxy A14 5ஜி இரண்டு விதமான SoC முறைகளில் அறிமுகப்படுத்தப்படலாம். இதனிடையில் அமெரிக்க சந்தையில் Dimensity 700சிப்செட் கிடைக்கும். பிற நாடுகளில் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் Exynos செயலி கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13ல் இயங்கும். சாம்சங் அதிகாரப்பூர்வமான அம்சங்கள் பற்றி இன்னும் கூறவில்லை. வெளியீட்டு நேரத்தில் அவற்றின் உரிய தகவல் கிடைக்கும்.

Categories

Tech |