தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை விரைந்து மீட்டெடுக்கும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாறிவரும் பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட எத்தகைய சவால்களையும் எதிர் நோக்கும் வகையில் தொடர்ந்து நிலையான வளர்ச்சி பெறுவதற்கு சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.