விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி விரைவில் நிறைவடைய இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பல நடிகைகள் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகிற மே 9-ஆம் தேதி முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் பைனல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது . இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.