விஜய் டிவியின் பிரபல சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜாக்குலின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி பிஏ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் டிவியில் முத்தழகு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தேன்மொழி பிஏ சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.