செஞ்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கபடுவதால் பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லை என்பதால் அதனை சரிசெய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடியே 74 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்ற டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதில் இடது பக்கம் உள்ள பழைய கடைகளை அப்புறபடுத்தி விட்டு புதிய கடைகள் கட்டப்படும். அதன்பின் மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்காத வகையில் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நகர் ஊரமைப்பு துறை அலுவலர் ராஜா மான்சிங், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் ராஜலட்சுமி, செயல் மணி, கவுன்சிலர் சங்கர், ஜான் பாஷா, உதவி பொறியாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் சோமு, பணி மேற்பார்வையாளர், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.