தல அஜித் அவர்களின் நடிப்பில் வெகுகாலமாக உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருவாக்கியுள்ளார். இந்த படம் சதுரங்க வேட்டை, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாரிப்பாளர் வினோத் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அவ்வப்போது மாஸ்டர் படத்தின் அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு சரி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என ஒருத்தர் விடாமல் அனைவரிடமும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்த நிலையில் விரைவில் கிடைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஜூலையில் படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் வெளியாகும் தேதியோடு சேர்த்து போஸ்டர் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.