காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அனுமந்தநகர் மேம்பாலத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.