இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் சியான் 61. இந்த படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் சியான் 61 படம் பற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது சியான் 61 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கப் போகின்றது இசையை பொருத்தவரை மிகவும் சுவாரசியமான கதை எனவும் பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.