விபத்திற்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் குவாங்சி மலைப்பகுதியில் மோதி நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்திற்குள்ளான விமானத்தின் முதல் கருப்பு பெட்டி 23 ஆம் தேதி கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இரண்டாவது கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாவது கருப்பு பெட்டியானது தரவுகளைப் பதிவு செய்யும் கருவியாகவும் விமானத்தின் வேகம் அது பயணித்த உயரம் திசை போன்ற நிகழ்வுகள் இந்தப் பெட்டியில் பதிவாகி இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் விமானம் விபத்திற்குள்ளான காரணம் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.