Categories
மாநில செய்திகள்

விரைவில் 1,450 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்….. அமைச்சர் குட் நியூஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழகம் முழுவதும் 1450 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

விரைவில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கால்நடை மருத்துவர்கள் தொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. தீர்ப்பு வந்தவுடன் கால்நடை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |