பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் பிப்ரவரி 16 (இன்று) செங்கல்பட்டு-சென்னை எழும்பூா் இடையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் கடந்த திங்கட்கிழமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக பிப்ரவரி 16 (இன்று) காரைக்குடி- சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயிலும் (12606), மதுரை- சென்னை எழும்பூா் வைகை விரைவு ரயிலும் (12636) செங்கல்பட்டு- சென்னை இடையில் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை எழும்பூா் – மதுரை வைகை விரைவு ரயில் (12635) மற்றும் சென்னை எழும்பூா் -காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) போன்றவை சென்னை எழும்பூா்- செங்கல்பட்டு இடையே பிப்ரவரி 16 ஆம் தேதி (இன்று) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.