Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விறகு சேகரிக்க சென்ற முதியவர்…. கடித்து குதறிய கரடி…. பரபரப்பு சம்பவம்…!!

கரடி முதியவரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் கூலித்தொழிலாளியான திருப்பதி(70) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது மகன் வெங்கடேசனுடன் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் புன்னன் வட்டம் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த கரடி திருப்பதியை கடித்து குதறியது. அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடிவந்த வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் கரடியை காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

அதன் பிறகு ரத்த காயங்களுடன் கிடந்த திருப்பதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |